Select Page

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

நியூட்ரிசார்ஜ் DHA யைப் பற்றிய கேள்விகள்

1. நியூட்ரிசார்ஜ் DHA என்றால் என்ன?

நியூட்ரிசார்ஜ் DHA ஒரு துணை உணவு ஆகும்.

2. நியூட்ரிசார்ஜ் DHA எவ்வாறு பயனளிக்கும்?

கருப்பையிலிருக்கும் சிசுவின் மூளை வளர்ச்சிக்கு (மூளை உறுப்பு வளர்ச்சி) நியூட்ரிசார்ஜ் DHA மிக உன்னதமாகப் பயனளிக்கும்.

3. குழந்தையின் மூளை வளர்ச்சி முழுவதும் தாயின் கருப்பையில் மட்டுமே நிகழ்ந்து விடுகிறதா?

குழந்தையின் 70% மூளை வளர்ச்சி அதன் தாயின் கருப்பையிலேயே நிகழ்கிறது.

4. DHA குறித்த மருத்துவ ஆய்வுகள் ஏதாவது செய்யப்பட்டுள்ளதா?

அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, டென்மார்க் போன்ற நாடுகளில் கர்ப்பவதிகள் DHA எடுத்துக்கொள்வது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கர்ப்பவதிகள் DHA எடுத்துக்கொள்வது மிகவும் பாதுகாப்பானது என்றும், அதனால் குழந்தையின் மூளை உன்னதமாக வளர உதவுகிறது என்றும் இந்த ஆய்வுகள் உறுதிபடுத்தியுள்ளன.

5. நியூட்ரிசார்ஜ் DHA வில் எவ்வளவு DHA உள்ளது?

மருத்துவ ஆய்வின் படி, கர்ப்பவதிகளுக்கு தினசரி அளவாக 400 மிகி DHA தேவைப்படும். நியூட்ரிசார்ஜ் DHA -வின் ஒவ்வொரு வெஜிடேரியன் சாஃப்ட் கேப்ஸ்யூலிலும் 400 மிகி DHA அடங்கியுள்ளது.

6. யார் நியூட்ரிசார்ஜ் DHA- வை எடுத்துக்கொள்ள வேண்டும்?

ஒவ்வொரு கர்ப்பவதியும் நியூட்ரிசார்ஜ் DHA -வை எடுத்துக்கொள்ள வேண்டும்.

7. கருப்பையிலிருக்கும் சிசுவிற்கு DHA எவ்வாறு கிடைக்கும்?

கர்ப்பவதி நியூட்ரிசார்ஜ் DHA -வை எடுத்துக்கொள்ளும் போது, பிளசன்டா மூலமாக குழந்தைக்கு DHA சென்றடைகிறது.

8. கர்ப்பவதிகளைத் தவிர்த்து, வேறு யாரெல்லாம் நியூட்ரிசார்ஜ் DHA -வை எடுத்துக்கொள்ளலாம்?

தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களும் நியூட்ரிசார்ஜ் DHA -வை எடுத்துக்கொள்ளலாம்.

9. கர்ப்பம் தரித்த எந்த மாதத்திலிருந்து கர்ப்பவதி நியூட்ரிசார்ஜ் DHA -வை எடுத்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்?

கர்ப்பம் தரித்த ஆரம்ப மாதத்திலிருந்து கர்ப்பவதி நியூட்ரிசார்ஜ் DHA எடுத்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்.

10. கர்ப்பம் தரிப்பதற்கு முன்னதாகவும் நியூட்ரிசார்ஜ் DHA எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கலாமா?

ஆமாம், கருத்தரிக்க திட்டமிட்ட நாளிலிருந்து நியூட்ரிசார்ஜ் DHA -வை எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும் போது ஒரு நாள் கூட வீணாகாமல் இருக்கும்.

11. நியூட்ரிசார்ஜ் DHA எடுத்துக்கொள்ளாமல் கர்ப்பம் தரித்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டிருக்கும் போதும் கூட, ஒரு பெண் நியூட்ரிசார்ஜ் DHA எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கலாமா?

நீங்கள் நியூட்ரிசார்ஜ் DHA -வை இன்றிலிருந்தும் கூட தொடங்கலாம். நீங்கள் இதை எடுத்துக்கொள்ள ஆரம்பித்த நாளிலிருந்து அதன் பலன் குழந்தைக்குக் கிடைக்கத் தொடங்கும்.

12. எவ்வளவு நாள் வரை நியூட்ரிசார்ஜ் DHA யைப் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்?

கர்ப்பம் தரித்த நாளிலிருந்து தாய்ப்பால் அளிக்கும் நாள் வரை நியூட்ரிசார்ஜ் DHA எடுத்துக்கொள்ள வேண்டும்.

13. ஒரு நாளில் எந்த நேரத்தில் நியூட்ரிசார்ஜ் DHA எடுத்துக்கொள்ள வேண்டும்?

ஒரு நாளில் எந்த நேரத்திலும் நியூட்ரிசார்ஜ் DHA -வை எடுத்துக்கொள்ளலாம்.

14. ஒரு நாளில் எவ்வளவு நியூட்ரிசார்ஜ் DHA கேப்ஸ்யூல்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒரு நாளில் ஒரே ஒரு நியூட்ரிசார்ஜ் DHA கேப்ஸ்யூலை எடுத்துக்கொள்ள வேண்டும்.

15. நியூட்ரிசார்ஜ் DHA -வின் வாசனை கர்ப்பவதியிடம் குமட்டலை ஏற்படுத்துமா?

நியூட்ரிசார்ஜ் DHA -வில் வாசனை எதுவுமில்லை. இதிலிருக்கும் கேரமெல் இனிய வாசனை ஒவ்வொரு கர்ப்பவதிக்கும் விருப்பமானதாக இருக்கும்.

16. நியூட்ரிசார்ஜ் DHA வாங்குவதற்கு டாக்டரின் மருந்து சீட்டு தேவைப்படுமா?

நியூட்ரிசார்ஜ் DHA ஒரு துணை உணவு. இதற்கு டாக்டரின் மருந்து சீட்டு தேவையில்லை.

17. நியூட்ரிசார்ஜ் உமன் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் ஸ்ட்ராபெர்ரி புரோடயட் இரண்டுடன் கூட நியூட்ரிசார்ஜ் DHA சேர்த்து எடுத்துக்கொள்ளலாமா?

ஆமாம், நியூட்ரிசார்ஜ் உமன் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் ஸ்ட்ராபெர்ரி புரொடயட் இரண்டுடன் கூட நியூட்ரிசார்ஜ் DHA சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.

18. நியூட்ரிசார்ஜ் DHA தயாரிப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் வெஜிடேரியன் DHA எங்கிருந்து பெறப்பட்டுள்ளது?

நியூட்ரிசார்ஜ் DHA -வில் சேர்க்கப்பட்டிருக்கும் வெஜிடேரியன் DHA கடல் தாவரங்களிலிருந்து பெறப்பட்டுள்ளது.

19. நியூட்ரிசார்ஜ் DHA வை எந்த வகையில் சைவ உணவாகக் கருத முடியும்?

நியூட்ரிசார்ஜ் DHA வெஜ் சாஃப்ட் கேப்ஸ்யூலில் சேர்க்கப்பட்டிருக்கும் DHA கடல்பாசியிலிருந்து பெறப்பட்டுள்ளது. அது ஒரு சைவ வளம்.

20. நியூட்ரிசார்ஜ் DHA கர்ப்பவதிகளுக்குப் பாதுகாப்பானதா?

நியூட்ரிசார்ஜ் DHA கர்ப்பவதிகளுக்கு முழுமையாகப் பாதுகாப்பானது. இது அவர்களுக்காக மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளது.

21. ஒரு பேக் நியூட்ரிசார்ஜ் DHA -வில் எவ்வளவு கேப்ஸ்யூல்கள் உள்ளன?

ஒவ்வொரு நியூட்ரிசார்ஜ் DHA பேக்கில் 30 கேப்ஸ்யூல்கள் உள்ளன (15 கேப்ஸ்யூல்ஸ் அடங்கிய 2 ஸ்டிரிப்ஸ்) அவை ஒரு மாதத்திற்கு போதுமானது.

நியூட்ரிசார்ஜ் மேன் மீது கேள்விகள்

1. நியூட்ரிசார்ஜ் மேன் டேப்லெட் என்றால் என்ன?

நியூட்ரிசார்ஜ் மேன் ஒரு முழுமையான தினசரி துணை உணவு, இது 35 வைட்டமின்கள், மினரல்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்டுகள் ஆகியவற்றை வழங்கி சமச்சீர் ஊட்டத்தின் மூலமாக ஆண்கள் ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கத் தேவைப்படும் தினசரி போஷாக்கு அளித்து உதவுகிறது.

2. சைவ உணவுப் பிரியர்களும் நியூட்ரிசார்ஜ் டேப்லெட்டுகளை எடுத்துக்கொள்ளலாமா?

ஆமாம், இதில் விலங்கு (அசைவம்) பொருள்கள் எதுவுமில்லை.

3. நியூட்ரிசார்ஜ் மேன் டேப்லெட்-ஐ தினசரி எடுத்துக்கொள்வதால் என்னென்ன பலன்கள்?

நவீன வாழ்க்கைமுறை, விரைவு உணவு, சமச்சீரற்ற உணவுப் பழக்கம், உணவு கிரகித்தல் குறைவு ஆகியவை காரணமாக, நுண்ணூட்டச்சத்துக்கள் முழு அளவில் கிடைப்பது கடினமாக உள்ளது. நுண்ணூட்டச்சத்துகள் பற்றாக்குறை காரணமாக ஆற்றல் குறைவு மற்றும் பலவீனம், நோய்த்தடுப்பாற்றல் குறைவு, தசை, எலும்புகள் மற்றும் பற்கள் பலவீனம் ஆகியவை ஏற்படும். இது போன்ற அத்தியாவசிய நுண்ணூட்டங்களை நியூட்ரிசார்ஜ் மேன் வழங்கி அவைகளின் குறைபாட்டை ஈடுசெய்து பல உறுப்புகளின் பணிகளைப் பராமரிக்க உதவி உறுப்புகளின் வலிமையைக் கூட்டும், அதனால் இதய நாளங்களுக்கும் உதவும், நீரிழிவு நிலைமைக்கும் ஆதரவாக இருக்கும்.

4. நியூட்ரிசார்ஜ் மேன் டேப்லெட்டில் ஏதாவது பக்கவிளைவுகள் உள்ளனவா?

உணவு உண்ட பிறகு பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவில் நியூட்ரிசார்ஜ் மேன் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் போது பெரும்பாலருக்கு இது ஏற்புடையதாகவே உள்ளது. அரிதான சமயங்களில் இதனால் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றில் அசௌகரிய உணர்வு ஏற்படலாம்.

5. எனக்கு நீரிழிவு நிலைமை உண்டு, நானும் நியூட்ரிசார்ஜ் மேன் -ஐ எடுத்துக்கொள்ளலாமா?

ஆமாம், நீங்களும் நியூட்ரிசார்ஜ் மேன் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம், நீரிழிவு நோயர்களுக்கு இது தீங்கு விளைவிக்காது. குரோமியம், வனடியம் மற்றும் துத்தநாகம் போன்ற மினரல்கள் நீரிழிவு நிலைமைக்கும் உதவி செய்யும். கிரீன் டீ எக்ஸ்டிராக்ட் எடுத்துக் கொள்வதால் கொழுப்புகள் எரிய உதவும், வைட்டமின் A மற்றும் இதர பிற ஆன்டிஆக்ஸிடண்டுகள் நோய் தடுப்பாற்றலை மேம்படுத்தி, கண் பாதிப்பையும் தடை செய்யும். இருந்தாலும், ஒருவேளை நீங்கள் ஏற்கனவே வைட்டமின்கள்-மினரல்கள் துணை உணவுகளை எடுத்துக்கொள்கிறீர்கள் என்றால், உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசியுங்கள்.

6. இந்த புராடெக்ட்-ஐ யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

14 வயது பூர்த்தியான ஆண்கள் எல்லோரும் நியூட்ரிசார்ஜ் மேன் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

7. நியூட்ரிசார்ஜ் மேன் மாத்திரையை ஒரு நாளில் எப்பொழுது எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?

தினந்தோறும் காலை அல்லது மதிய உணவிற்குப் பிறகு ஒரு முழு டம்ளர் தண்ணீருடன் நியூட்ரிசார்ஜ் மேன் ஒரு மாத்திரையை எடுத்துக்கொள்ள வேண்டும்.

8. நியூட்ரிசார்ஜ் -ஐ எடுத்துக்கொள்ள டாக்டரின் மருந்துச்சீட்டு தேவைப்படுமா?

நியூட்ரிசார்ஜ் மேன் ஒரு துணை உணவு என்பதால், நீங்களாகவே இதை எடுத்துக்கொள்ளலாம்; இருந்தாலும், உங்கள் டாக்டரிடம் கேட்டுக் கொள்வது உங்களுக்குத் திருப்தி அளிக்கும் என்றால், அவரிடமும் கலந்தாலோசியுங்கள்.

9. சில காலத்திற்கு நான் இதைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் போது எடை கூடுமா அல்லது குறையுமா?

நியூட்ரிசார்ஜ் மேன் ஒரு ஊட்டச்சத்து குறை நிரப்பியாகச் செயல்பட்டு உணவு சத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மட்டுமே செயல்படும் என்பதால் இதனால் எடை கூடாது. கிரீன் டீ எக்ஸ்டிராக்ட் கொழுப்புகளை எரிக்க உதவும்.

10. நியூட்ரிசார்ஜ் மேன் ஒரு மருந்தா?

நியூட்ரிசார்ஜ் மேன் மாத்திரை மருந்து அல்ல. B காம்ப்ளெக்ஸ் காரணிகள், இதர பிற வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் அமினோ அமிலங்கள் அடங்கிய இது ஒரு தினசரி துணை உணவு.

11. இதை எவ்வளவு நாட்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்?

நியூட்ரிசார்ஜ் மேன் மாத்திரையை தினசரி ஒரு மாத்திரை வீதம் நீண்ட காலத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.

12. நியூட்ரிசார்ஜ் மேன் மாத்திரையை நான் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருந்தால், இப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவேனா?

நியூட்ரிசார்ஜ் மேன் மாத்திரை பழக்கத்தை ஏற்படுத்தும் ஒன்று அல்ல, உங்கள் விருப்பம் போல இதை தொடர்ந்து எடுத்துக்கொள்ளலாம் என்றாலும், அதிகபட்ச பலன் பெற இதை நீண்ட காலத்திற்கு எடுத்துவர வேண்டும்.

13. நியூட்ரிசார்ஜ் மேன் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் முன்னர் ஒரு மருத்துவருடன் நான் கலந்தாலோசிக்க வேண்டுமா?

இது ஒரு துணை உணவு என்பதால், நியூட்ரிசார்ஜ் மேன் மாத்திரைக்கு டாக்டரின் மருந்துச் சீட்டு தேவை இல்லை. ஹெல்த்/உணவு குறைநிரப்பிகள் உலகம் முழுவதிலும் பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமலேயே விற்கப்பட்டு வருகின்றன. வெல்நெஸ் புராடெக்டுகளிலிருந்து மிகப் பெரிய பலனடையாம் என்று இந்தியாவில் பலரும் உணர்ந்திருக்கிறார்கள், நியூட்ரிசார்ஜ் மேன் ஓர் உயர் தர துணை உணவு ஆகும்.

14. நியூட்ரிசார்ஜ் மேன் டிரையல் பேக் ஏதாவது கிடைக்கிறதா?

நியூட்ரிசார்ஜ் மேன் 30 மாத்திரைகள் அடங்கிய பேக் ஒன்றின் விலை வெறும் ரூ.350/- இது ஒரு மாதத்திற்குப் போதும்.

15. நான் ஏற்கனவே ஒரு சிறப்பு டயட்டில் இருந்து கொண்டிருக்கிறேன். அப்பொழுது கூட நியூட்ரிசார்ஜ் எடுத்துக்கொள்ளலாமா?

நீங்கள் ஒரு ஸ்பெஷல் டயட்டில் இருந்தால் அல்லது டயட்டிங் செய்து கொண்டிருந்தால், நியூட்ரிசார்ஜ் மேன் உங்களுக்கு அவசியம் தேவைப்படும் வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் அமினோ அமிலங்களை வழங்கும், நீங்கள் பின்பற்றும் கண்டிப்பான டயட்டில் இவை கிடைக்காமலிருக்கலாம்.

நியூட்ரிசார்ஜ் உமன் மீது கேள்விகள்

1. நியூட்ரிசார்ஜ் உமன் டேப்லெட் எடுத்துக்கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

நியூட்ரிசார்ஜ் உமன் மாத்திரை பெண்களுக்குத் தேவைப்படும், 14 அரிய 53 பழச்சாறுகளின் தாவர ஊட்டச்சத்துகள் உட்பட பயனளிக்கும் ஊட்டச்சத்துக்களை வழங்கி ஆரோக்கியத்திற்கும் இளமை தோற்றத்திற்கும் உதவும். அத்துடன் இதில் கிடைக்கும் 6 சிறப்பு ஊட்டச்சத்துக்கள் மகளிர் வாழ்க்கையில் பல கட்டங்களில் பாதிக்கும் குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகளை தீர்க்கவும் உதவக் கூடும். கூடுதலாக, அவர்களுக்குத் தினசரி தேவைப்படும் 33 முக்கிய வைட்டமின்கள், மினரல்கள், ஆன்டிஆக்ஸிடண்ட்டுகள் மற்றும் அமினோ அமிலங்களையும் வழங்கி அவர்கள் உடல்நலத்தையும் பேணும்.

2. சைவ உணவுப் பிரியர்களும் நியூட்ரிசார்ஜ் உமன் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாமா?

ஆமாம், சைவ உணவுப் பிரியர்களும் நியூட்ரிசார்ஜ் உமன் மாத்திரைகளை எடுத்துக் கொள்ளலாம், ஏனென்றால் இதில் விலங்கு (அசைவ) வளங்கள் எதுவுமில்லை.

3. நியூட்ரிசார்ஜ் உமன் மாத்திரை பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா?

உணவு உண்ட பிறகு பரிந்துரைக்கப்பட்ட மருந்தளவில் நியூட்ரிசார்ஜ் உமன் மாத்திரையை எடுத்துக்கொள்ளும் போது பெரும்பாலருக்கு இது ஏற்புடையதாகவே உள்ளது. அரிதான சமயங்களில் இதனால் குமட்டல், வாந்தி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது வயிற்றில் அசௌகரிய உணர்வு ஏற்படலாம்.

4. எனக்கு நீரிழிவு நிலைமை உண்டு. நானும் நியூட்ரிசார்ஜ் உமன் -ஐ எடுத்துக்கொள்ளலாமா?

நியூட்ரிசார்ஜ் உமன் டேப்லெட் நீரிழிவு நோயர்களுக்கும் பயனளிக்கும். குரோமியம், மற்றும் வனடியம் உடலில் சர்க்கரைப் பயன்பாட்டை மேம்படுத்தும்; கிரீன் டீ எக்ஸ்டிராக்ட் கொழுப்புகளை எரிக்க உதவும், வைட்டமின் A, துத்தநாகம் மற்றும் இதர பிற ஆன்டிஆக்ஸிடண்டுகள் நோய் தடுப்பாற்றலை மேம்படுத்தி, கண் பாதிப்பையும் தடை செய்யும். நீங்கள் உங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்கலாம்.

5. நியூட்ரிசார்ஜ் உமன் டேப்லெட்-ஐ யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

14 வயது பூர்த்தியான பெண்கள் எல்லோரும் நியூட்ரிசார்ஜ் உமன் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.

6. நான் நியூட்ரிசார்ஜ் உமன் டேப்லெட்- ஐ எடுத்துக்கொள்ள மருந்துச் சீட்டு தேவைப்படுமா?

நியூட்ரிசார்ஜ் உமன் ஒரு துணை உணவு என்பதால், நீங்களாகவே இதை எடுத்துக்கொள்ளலாம்; இருந்தாலும், உங்கள் டாக்டரிடம் கேட்டுக் கொள்வது உங்களுக்குத் திருப்தி அளிக்கும் என்றால், அவரிடமும் கலந்தாலோசியுங்கள்.

7. சில காலத்திற்கு நான் நியூட்ரிசார்ஜ் உமன் மாத்திரையை சாப்பிட்டு வந்தால் எடை கூடும் அல்லது குறையுமா?

நியூட்ரிசார்ஜ் உமன் டேப்லெட் ஒரு துணை உணவாக வழக்கமான உணவிலிருக்கும் பற்றாக்குறைகளை ஈடுசெய்து இளம் பெண்கள் மற்றும் மகளிரை ஃபிட்டாக வைத்துக் கொள்ளும், வளர்சிதை மாற்றங்களை மேம்படுத்தும். உடல் எடையைப் பாதிக்கும் குறிப்பிட்ட மூலப்பொருள்கள் எதுவும் இதில் இல்லை. கிரீன் டீ எக்ஸ்டிராக்ட் கொழுப்புகளை எரிக்க உதவும்.

8. நியூட்ரிசார்ஜ் உமன் டேப்லெட் மருந்தா?

நியூட்ரிசார்ஜ் உமன் டேப்லெட் மருந்து அல்ல. இது ஓர் உடல்நல துணை உணவு, தாவர போஷாக்குகள் (பைடோநியூட்ரியன்ட்ஸ்), பெண்களுக்குத் தேவைப்படும் அரிய ஊட்டச்சத்துகள், மினரல்கள், அமினோ அமிலங்கள், பி-காம்ப்ளெக்ஸ் மற்றும் இதர பிற வைட்டமின்கள் ஆகியவை இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

9. எவ்வளவு காலத்திற்கு நியூட்ரிசார்ஜ் உமன் டேப்லெட்டுகளை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்?

நியூட்ரிசார்ஜ் உமன் மாத்திரையை தினசரி ஒரு மாத்திரை வீதம் காலை அல்லது மதிய உணவுக்குப் பிறகு ஒரு டம்ளர் தண்ணீருடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நியூட்ரிசார்ஜ் புரோடயட் மீது கேள்விகள்

கே.1 – நியூட்ரிசார்ஜ் புரோடயட்-ஐ எவ்வளவு காலத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்?

வளர்ந்தவர்கள் மற்றும் குழந்தைகளின் உடல் திசுக்கள் வளர்ச்சி, சேதங்களை ஈடுகட்டுதல் மற்றும் பராமரிப்புக்கு தினசரி சுமார் 1கிராம்/கிலோ அளவு புரதம் தேவைப்படும். நியூட்ரிசார்ஜ் புரோடயட்-ல் மிகச் சிறப்பான அளவில் புரதம் கிடைக்கும் என்பதால் பரிந்துரைக்கப்பட்ட அளவில் அதை தினமும் எடுத்துக்கொள்ளும் போது புரத சத்தின் பற்றாக்குறை நீங்கும். 25 கிராம் அளவில் சோயா புரதத்துடன் கொழுப்பு குறைந்த உணவை தினசரி சாப்பிட்டு வந்தால் இதய நோய்களிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்று யு.எஸ். உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (USFDA) பரிந்துரைத்துள்ளது.

கே.2 – நான் போதுமான அளவில் பழங்கள், காய்கறிகள் மற்றும் தானிய வகைகளை உண்ணும் பழக்கமுடையவன் என்றாலும் கூட நியூட்ரிசார்ஜ் புரோடயட் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

பழங்கள், காய்கறிகள் மற்றும் தானிய வகைகளை உண்ணும் பழக்கத்தால் ஓரளவு புரத சக்தி கிடைத்தாலும், பலதரப்பட்ட பருப்புகள், கொட்டைகள், தானியங்கள் மற்றும் பால் பொருட்களை தினம் தினம் சாப்பிட்டால் ஒழிய, எளிதாக செரிமானமாகும் முழுமையான புரதத்துடன் அனைத்து இன்றியமையாத அமினோ அமிலங்கள் போதுமான அளவில் கிடைப்பது கடினமாக இருக்கும். ஒரு சிலரிடம் தாவர புரதங்கள் எளிதாக செரிமானமாவதில்லை. நியூட்ரிசார்ஜ் புரோடயட் உயர்தர சோயா புரதத்தை வழங்குகிறது, இது எளிதாக செரிமானமாகும், இதய செயல்பாடுகளுக்கு எளிதாக இருக்கும் இந்த முழுமையான புரதம் ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும் நல்லது. நியூட்ரிசார்ஜ் புரோடயட்-லிருந்து அனைத்து ஒன்பது இன்றியமையாத அமினோ அமிலங்கள் சமச்சீர் அளவில் கிடைக்கும்.

கே.3 – வெகு சீக்கிரத்தில் நான் களைப்படைந்து விடுகிறேன். இதற்கு நியூட்ரிசார்ஜ் புரோடயட் உதவுமா?

புரத குறைபாடு பற்பல உறுப்புகளை பலவீனமடையச் செய்கிறது, திசுக்கள் ரிப்பேர் ஆவதையும் பராமரிப்பையும் தடுக்கிறது, நோய் தடுப்பாற்றலைக் குறைக்கிறது. நியூட்ரிசார்ஜ் புரோடயட் வழங்கும் உயர்தர சுத்தகரித்து பதப்படுத்தப்பட்ட சோயா புரதம் உடல் வலுவை அதிகரித்து நோய் தடுப்பாற்றலை மேம்படுத்தும். அனைத்து முக்கிய மினரல்கள் மற்றும் வைட்டமின்களைப் பெற வளர்ந்தவர்கள் இதனுடன் நியூட்ரிசார்ஜ் மேன்/உமன் டேப்லெட்-ஐயும் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கே. 4 – நியூட்ரிசார்ஜ் புரோடயட் -ல் ஏதாவது பக்கவிளைவுகள் உள்ளனவா?

மொத்த ஊட்டச்சத்தில் ஒரு பகுதியாக மட்டுமே சமச்சீர் அளவில் புரதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும். நியூட்ரிசார்ஜ் புரோடயட் எடுத்துக்கொள்ளும் பலருக்கு இது ஏற்புடையதாக இருக்கிறது, ஆனால் மிக அதிகம் எடுத்துக்கொண்டால் வயிற்றுப் பொருமல் (கேஸ்) ஏற்படலாம். சிறுநீரக நோயாளிகள் தங்கள் டாக்டரிடம் கலந்தாலோசித்த பிறகே நியூட்ரிசார்ஜ் புரோடயட் எடுத்துக்கொள்ள வேண்டும். கீல்வாதம் (கவுட்) பிரச்சனையுள்ளவர்கள் நியூட்ரிசார்ஜ் புரோடயட் -ஐ எடுத்துக்கொள்ளக் கூடாது.

கே. 5 – நான் வேறு மருந்துகளையும் எடுத்துக்கொண்டு வருகிறேன், அதனுடன் நியூட்ரிசார்ஜ் புரோடயட் எடுத்துக்கொள்ளலாமா?

நியூட்ரிசார்ஜ் புரோடயட் ஓர் உடல்நல துணை உணவு என்பதால், பொதுவான நோயுள்ளவர்களும் இதை எடுத்துக்கொள்ளலாம். என்றாலும், லிவர் மற்றும் சிறுநீரக நோயாளிகள் மற்றும் தீவிர நோயாளிகள் தங்கள் மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே இதை எடுத்துக்கொள்ள வேண்டும். கீல்வாத நோயாளிகள் நியூட்ரிசார்ஜ் புரோடயட் -ஐ எடுத்துக்கொள்ளக் கூடாது.

கே. 6 – நான் ஒரு நீரிழிவு நோயாளி, இதயப் பிரச்சனைகளும் உண்டு, நான் நியூட்ரிசார்ஜ் புரோடயட் -ஐ எடுத்துக்கொள்ளலாமா?

நியூட்ரிசார்ஜ் புரோடயட் -ல் சோயா புரதம் உள்ளது, இரத்த சர்க்கரை மற்றும் இரத்த கொலஸ்டிரால் அளவுகளைப் பராமரிக்க இது உதவும். நியூட்ரிசார்ஜ் புரோடயட் தயாரிப்பில் கூடுதலாக சர்க்கரை மற்றும் கொழுப்புகள் சேர்க்கப்படவில்லை. இதில் ரெசிஸ்டன்ட் மால்டோடெக்ஸ்டிரின் (உணவு நார்சத்து) கூடுதலாகச் சேர்க்கப்பட்டிருப்பதால் நீரிழிவு நோயர்களுக்கு இது உகந்தது. இருந்தாலும், தீவிர நோயாளிகள் தங்கள் மருத்துவருடன் கலந்தாலோசிக்க வேண்டும்.

கே.7 – குழந்தைகளுக்கும், முதிர் வயதினருக்கும் கூட இதைக் கொடுக்கலாமா?

குழந்தைகளும் முதிர் வயதினரும் நியூட்ரிசார்ஜ் புரோடயட் -ஐ எடுத்துக்கொள்ளலாம். வளரும் குழந்தைகளுக்கு அவர்கள் வளர்ச்சிக்கும் உடல்நல மேம்பாட்டிற்கு தேவைப்படும் முழுமையான புரதம் மற்றும் அனைத்து இன்றியமையாத அமினோ அமிலங்கள் இதிலுள்ளன. முதிர் வயதினர்களுக்கு நியூட்ரிசார்ஜ் புரோடயட் -லிலுள்ள முழுமையான புரதம் எளிதாகச் செரிமானமாகும், அவர்கள் உடல்நலமும் மேம்படும். நியூட்ரிசார்ஜ் புரோடயட் -லிலுள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தும்.

கே.8 – கர்ப்பவதிகள் மற்றும் தாய்ப்பால் அளிப்பவர்களுக்கு நியூட்ரிசார்ஜ் புரோடயட் -லிருந்து என்ன பலன் கிடைக்கும்?

கர்ப்பவதிகள் மற்றும் தாய்ப்பால் அளிப்பவர்களுக்கு புரத சத்து தேவை மிகவும் அதிகரித்திருக்கும். நியூட்ரிசார்ஜ் புரோடயட் துணை உணவில் உயர்தர புரதம், இரும்புச் சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் கால்சியம் ஆகியவை இருந்தாலும், தங்கள் மருத்துவர்களுடன் கலந்தாலோசித்த பிறகே இவர்கள் நியூட்ரிசார்ஜ் புரோடயட் -ஐ எடுத்துக்கொள்ள வேண்டும். முழுமையான புரதம் தாயிடமும் சிசுவிடமும் நோய் உருவாவதைத் தடுத்து குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்க உதவும்.

கே.9 சைவ உணவுப் பிரியர்களும் நியூட்ரிசார்ஜ் புரோடயட்-ஐ எடுத்துக்கொள்ளலாமா?

ஆமாம், சைவ உணவுப் பிரியர்களும் இதை எடுத்துக்கொள்ளலாம், ஏனென்றால் நியூட்ரிசார்ஜ் புரோடயட்-ல் விலங்கு (அசைவ) வள மூலப்பொருள் எதுவுமில்லை.

கே.10. நான் நியூட்ரிசார்ஜ் புரோடயட் -ஐ எவ்வாறு, எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?

வளர்ந்த ஆண்களும் பெண்களும் 2 அளவுகளும் (ஒரு அளவு 20 கிராம்) குழந்தைகள் 1 அளவும் தினசரி எடுத்துக்கொள்ள வேண்டும். நியூட்ரிசார்ஜ் புரோடயட் பௌடருடன் குளிர்ந்த பால் அல்லது தண்ணீரைச் சேர்த்து மிக்ஸர் அல்லது ஷேக்கரில் கலந்து கொள்ளலாம். தேவைப்பட்டால் சர்க்கரை அல்லது இனிப்பூட்டியை சேர்த்து குலுக்கிக் கொள்ளவும். பிறகு தேவையான அளவு பால் மற்றும் தண்ணீரைச் சேர்த்து இதைப் பருகலாம்.

நியூட்ரிசார்ஜ் S & F மீது கேள்விகள்

கே.1 – நியூட்ரிசார்ஜ் S & F என்றால் என்ன?

நியூட்ரிசார்ஜ் S & F என்பது ஊட்டச்சத்துள்ள துனை உணவு, உடற்பருமனைக் குறைக்க உதவும்.

கே.2 – என் உடல் நிலை ஃபிட்டாக இருக்கும் போது நான் ஏன் நியூட்ரிசார்ஜ் S & F எடுத்துக்கொள்ள வேண்டும்?

சாதாரண உடலிலும் உடல் கொழுப்புகள் சேர்ந்திருக்கும், ஒரு பாடி ஸ்கேனர் உதவியுடன் மட்டுமே இதைத் தெரிந்துகொள்ள முடியும். ஒரு பாடி ஸ்கேனரில் நீங்கள் உங்களைச் சோதித்துக்கொள்ளுங்கள். ஆண்கள் என்றால் அவர்கள் உடல் கொழுப்பு 25% க்கும் அதிகம் இருக்கும் போதும் பெண்கள் என்றால் அவர்கள் உடல் கொழுப்பு 30% க்கும் அதிகம் இருந்தால் நியூட்ரிசார்ஜ் S & F எடுத்துக்கொள்ள வேண்டும்.

கே.3 – உடல் எடை இழப்பு சமயத்தில் தசைகளைப் பாதுகாக்க வேண்டியது அவசியம் எனப்படுவது ஏன்?

தசைகள் இழப்பினால் பலவீனம் தோன்றும்.

கே.4 – நியூட்ரிசார்ஜ் S & F மிகவும் விலை அதிகமுள்ளதா?

பணத்திற்கான மதிப்பு என்ன கிடைக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உடலில் மிக அதிகம் கொழுப்பு சேர்ந்திருந்தால் எதிர்காலத்தில் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், நீரிழிவு, மூட்டு வலி போன்றவை உருவாகக் கூடும். இவைகளுக்கான சிகிச்சைக்கு இலட்சங்களில் செலவிட வேண்டியதாக இருக்கும். நியூட்ரிசார்ஜ் S & F உதவியுடன் நீங்கள் உங்கள் உடல் கொழுப்பைக் குறைத்துக்கொண்டால், இது உயிர்கொல்லி நோயிலிருந்து நீங்கள் உங்களைப் பாதுகாப்பதுடன், எக்கச்சக்கமாகச் செலவு செய்ய வேண்டிய அவசியமும் நேராது.

கே.5 – நியூட்ரிசார்ஜ் புரோடயட்-வுடன் நியூட்ரிசார்ஜ் S & F சேர்த்து எடுத்துக்கொள்ளலாமா?

இரவு உணவாக நியூட்ரிசார்ஜ் S & F -ஐ எடுத்துக்கொள்ள வேண்டும். நியூட்ரிசார்ஜ் மேன் மற்றும் நியூட்ரிசார்ஜ் புரோடயட் அல்லது நியூட்ரிசார்ஜ் உமன் மற்றும் நியூட்ரிசார்ஜ் ஸ்ட்ராபெர்ரி புரோடயட் தயாரிப்புகளை ஒவ்வொரு நாள் காலையில் எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும்.

கே.6 – ஒரு நாளில் எந்த நேரத்தில் நியூட்ரிசார்ஜ் S & F -ஐ எடுத்துக்கொள்ள வேண்டும்?

நியூட்ரிசார்ஜ் S & F தயாரிப்பு உணவுக்குப் பதிலானது. இதை இரவு உணவுக்குப் பதிலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

கே.7 – எவ்வளவு காலத்திற்கு நியூட்ரிசார்ஜ் S & F -ஐ எடுத்துக்கொள்ள வேண்டும்?

பாடி ஸ்கேனரில் சோதித்துக்கொள்ளும் போது உடல் கொழுப்பு ஆண்களுக்கு 20%க்கும் குறைவாகவும், பெண்களுக்கு 25% க்கும் குறைவாகவும் இருக்கும் வரை நியூட்ரிசார்ஜ் S & F எடுத்துக்கொள்ள வேண்டும்.

கே.8 – உடல் கொழுப்பைக் குறைக்க நியூட்ரிசார்ஜ் S & F எவ்வாறு உதவும்?

நியூட்ரிசார்ஜ் S & F லிருக்கும் கொழுப்பைக் குறைக்கும் கூறுப்பொருள்கள் நம் உடல் கொழுப்பைக் குறைக்க உதவும்

கே.9 – நியூட்ரிசார்ஜ் S & F தயாரிப்பு சந்தையில் கிடைக்கும் இதர பிற எடை குறைப்பு தயாரிப்புகளை விட எவ்வகையில் சிறந்தது?

நியூட்ரிசார்ஜ் S & F -ல் கொழுப்பைக் குறைக்கும் மூலப் பொருட்களும் உயர்தர புரதமும் அடங்கியுள்ளது.

கே.10 – நியூட்ரிசார்ஜ் S & F-ல் புரதம் ஏன் சேர்க்கப்பட்டுள்ளது?

நியூட்ரிசார்ஜ் S & F -ல் சேர்க்கப்பட்டிருக்கும் புரதம் தசைகளைப் பாதுகாத்து உடலில் புதுக் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது.

கே.11 – எவ்வளவு எண்ணிக்கை மற்றும் என்ன மாதிரியான கொழுப்பைக் குறைக்கும் மூலப் பொருள்கள் நியூட்ரிசார்ஜ் S & F -ல் உள்ளன?

நியூட்ரிசார்ஜ் S & F -ல் மூன்று கொழுப்பைக் குறைக்கும் மூலப் பொருள்கள் உள்ளன. அவை: கார்சினியா கம்போஜியா, சிஎல்ஏ மற்றும் கிரீன் பீன் எக்ஸ்டிராக்ட்.

கே.12 – நியூட்ரிசார்ஜ் S & F -ல் சேர்க்கப்பட்டிருக்கும் கிரீன் காபி பீன் எக்ஸ்டிராக்டின் சிறப்பம்சம் என்ன?

நியூட்ரிசார்ஜ் S & F -ல் சேர்க்கப்பட்டிருக்கும் கிரீன் காபி பீனில் ஸ்வெடோல் உள்ளது, இது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கே.13 – உடல் கொழுப்பைக் குறைப்பதில் கிரீன் காபி பீன் எக்ஸ்டிராக்ட் எவ்வாறு உதவுகிறது?

உடலில் ஏற்கனவே சேர்ந்திருக்கும் கொழுப்புகளைக் அகற்ற இது உதவும்.

கே.14 – இரவு நேரத்தில் நான் கிரீன் காபி பீன் எக்ஸ்டிராக்ட் எடுத்துக்கொண்டால், எனக்கு தூக்கம் பிடிக்காது.

நியூட்ரிசார்ஜ் S & F-ல் சேர்க்கப்பட்டிருக்கும் கிரீன் காபி எக்ஸ்டிராக்டிலிருந்து கஃபைன் நீக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு தூக்கத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது.

கே.15 – நியூட்ரிசார்ஜ் S & F -ல் எந்த சிஎல்ஏ சேர்க்கப்பட்டுள்ளது?

டொனாலின் சிஎல்ஏ (இத்தாலியிலிருந்து) நியூட்ரிசார்ஜ் S & F -ல் சேர்க்கப்பட்டுள்ளது.

கே.16 – இந்த சிஎல்ஏ மருத்துவரீதியாக நிரூபணமான ஒன்றா?

ஆமாம், இந்த சிஎல்ஏ உடல் கொழுப்பைக் குறைப்பது மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

கே.17 – கொழுப்பைக் குறைப்பதில் சிஎல்ஏ எவ்வாறு உதவும்?

உடலிலுள்ள கொழுப்பு செல்கள் எண்ணிக்கையை சிஎல்ஏ குறைக்கும். இந்த செல்களிலுள்ள கொழுப்பையும் இது குறைக்கும்.

கே.18 – உடல் கொழுப்பைக் குறைக்க கார்சினியா கம்போஜியா எவ்வாறு உதவும்?

கார்சினியா கம்போஜியா ஏற்கனவே சேகரமாகியிருக்கும் உடல் கொழுப்பைக் குறைத்து புதிய கொழுப்புகள் உடலில் சேராமல் பார்த்துக்கொள்ளும்.

கே.19 – நியூட்ரிசார்ஜ் S & F மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டிருப்பதன் முக்கியத்துவம் என்ன?

இத் தயாரிப்பு உடல் கொழுப்பைக் குறைப்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டிருப்பதை அரசு அங்கீகாரமளித்திருக்கும் நிபுணர்கள் அடங்கிய நெறிமுறைக் குழு சான்றளித்திருப்பதைக் குறிக்கிறது. இத் தயாரிப்பை முழுமையான பாதுகாப்புடன் பயன்படுத்தலாம் என்பதையும் இது நிரூபிக்கிறது.

கே.20 – நியூட்ரிசார்ஜ் S & F-ல் எவ்வளவு வகையான புரதங்கள் உள்ளன?

நியூட்ரிசார்ஜ் S & F -ல் தனியாகப் பிரித்தெடுக்கப்பட்ட சோயா புரதம் மற்றும் வே புரதம் உள்ளன.

கே.21 – ஒவ்வொரு சாஷேயில் எவ்வளவு புரதம் உள்ளது?

ஒவ்வொரு சாஷேயில் 15 கிராம் புரதம் உள்ளது.

கே.22 – இந்த புரதம் எங்கிருந்து பெறப்பட்டிருக்கிறது?

இப் புரதம் டுபான்ட், அமெரிக்காவிலிருந்து பெறப்பட்டிருக்கிறது.

கே.23 – நியூட்ரிசார்ஜ் S & F எடுத்துக்கொள்ளும் போது உணவுக் கட்டுப்பாடும் அவசியமா?

நியூட்ரிசார்ஜ் S & F எடுத்துக்கொள்ளும் போது இரவு உணவைத் தவிர்க்க வேண்டும். ஒரு நாள் முழுவதும் சாப்பிடும் உணவு 1500 கலோரிகள் அளவே இருக்க வேண்டும், கொழுப்புப் பதார்த்தங்களிலிருந்து ஒதுங்கியிருக்க வேண்டும். நியூட்ரிஷன் சயின்ஸ் புக்கில் கொடுக்கப்பட்டிருக்கும் உணவுக் கட்டுப்பாட்டைப் பின்பற்றலாம்.

கே.24 – நியூட்ரிசார்ஜ் S & F எடுத்துக்கொள்ளும் போது உடற்பயிற்சி செய்ய வேண்டியதும் அவசியமா?

ஆமாம். உடற்பயிற்சியும் (6000 எண்ணிக்கையில் காலடிகள் மற்றும் 250 படிகள் ஏறுதல்) நியூட்ரிசார்ஜ் S & F எடுத்துக்கொள்ளும் போது செய்ய வேண்டும்.

கே.25 – ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கும் போது கூட நியூட்ரிசார்ஜ் S & F எடுத்துக்கொள்ளலாமா?

நீரிழிவு நோயாளி ஒருவர் முதலில் தன் நீரிழிவு நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர நியூட்ரிசார்ஜ் கிளைசெம் மாத்திரையையும் , நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் மற்றும் மருத்துவர் கொடுத்திருக்கும் மருந்துகளையும் பயன்படுத்த வேண்டும். அதன் பிறகே நியூட்ரிசார்ஜ் S & F எடுத்துக்கொள்வது பரிந்துரைக்கப்பட வேண்டும்.

கே.26 – எந்த வயதில் நியூட்ரிசார்ஜ் S & F -ஐ எடுத்துக்கொள்ள ஆரம்பிக்க வேண்டும்?

14 வயதிலிருந்து நியூட்ரிசார்ஜ் S & F -ஐ எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கலாம்.

கே.27 – நியூட்ரிசார்ஜ் S & F -ஐ எடுத்துக்கொண்ட பிறகும் இரவில் பசித்தால் என்ன செய்வது?

இரவு உணவாக நியூட்ரிசார்ஜ் S & F -ஐ எடுத்துக்கொண்ட பிறகும் பசித்தால் சாலட் அல்லது சூப் சாப்பிடலாம்.

நியூட்ரிசார்ஜ் BJ வைப் பற்றிய கேள்விகள்

கே.1 – நியூட்ரிசார்ஜ் BJ என்றால் என்ன?

நியூட்ரிசார்ஜ் BJ எலும்பு மற்றும் மூட்டுகளுக்கான ஹெல்த் துணை உணவுப் பொருள். முழங்கால் மூட்டுகளுக்காக இது பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

கே.2 – நியூட்ரிசார்ஜ் BJ என்பது ஒரு மருந்தா?

நியூட்ரிசார்ஜ் BJ மருந்து அல்ல. இது ஒரு துணை உணவுப் பொருள்.

கே.3 – நியூட்ரிசார்ஜ் BJ யார் எடுத்துக்கொள்ளலாம்?

முழங்கால் மூட்டு வலியால் துண்பப்படுபவர்கள் அனைவரும் நியூட்ரிசார்ஜ் BJ -யை உடனே எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கலாம்.

கே.4 – வேறு மூட்டுகளிலும் வலி இருந்தால் அதிலிருந்து நிவாரணம் பெறவும், மூட்டுக்களைப் பலப்படுத்தவும் நியூட்ரிசார்ஜ் BJ -வை எடுத்துக்கொள்ளலாமா?

முழங்கால் மூட்டுகள் உடல் பாரம் முழுவதையும் தாங்கிக் கொண்டிருப்பதால் இவை முக்கிய மூட்டுகளாகக் கருதப்படுகின்றன. ஆகையால்தான் இதை கவனித்துக் கொள்வது மிகவும் அவசியம் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும், வேறு மூட்டுகளின் ஆரோக்கியத்தையும் நியூட்ரிசார்ஜ் BJ மேம்படுத்தும்.

கே.5 – நியூட்ரிசார்ஜ் BJ மிகவும் விலை உயர்ந்ததா?

பணத்திற்கான மதிப்பு என்ன கிடைக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். முழங்கால் மூட்டு மாற்றுறுப்பு பொருத்துதல் சிகிச்சைக்கு இலட்சக் கணக்கில் செலவாகும். இது போன்ற எதிர்கால செலவினங்களைத் தவிர்த்திருக்க நீங்கள் இப்பொழுதிலிருந்தே நியூட்ரிசார்ஜ் BJ -ஐ எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கலாம்.

கே.6 – நியூட்ரிசார்ஜ் BJ டேப்லெட்டுடன் சாஷே இரண்டையும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

அறிவியல் ரீதியாக நியூட்ரிசார்ஜ் BJ தயாரிக்கும் போது, சில ஊட்டச்சத்துக்களை டேப்லெட்டிலும் வேறு சிலவற்றை சாஷேயிலும் சேர்த்து செய்திருக்கிறோம். டேப்லெட்டில் பொருத்தமாகச் சேர்க்க இயலாதவைகளை சாஷேயில் தனியாகச் சேர்த்திருக்கிறோம். கசப்பு சுவையுள்ள ஊட்டச்சத்த்துகளை பௌடர் வடிவத்தில் வைத்திருக்காமல் அதை மாத்திரையாகச் செய்திருக்கிறோம். ஆகையால், நியூட்ரிசார்ஜ் BJ மாத்திரையையும் சாஷேவிலுள்ளதையும் ஒன்றாக எடுத்துக்கொண்டால் உத்தமமான பலன் கிடைக்கும்.
ஒரு சில ஊட்டச்சத்துக்களை மாத்திரையில் சேர்த்திருக்கிறோம். அப்பொழுது தான் அவை சிறப்பாகக் கிரகித்துக்கொள்ள முடியும். உதாரணத்திற்கு, சிறப்பான கிரகித்தலுக்கு கால்சியம் சத்தை சாஷேயில் சேர்த்திருக்கிறோம், வைட்டமின் கே27-ஐ மாத்திரையில் சேர்த்திருக்கிறோம். ஆகையால், மாத்திரை மற்றும் சாஷே இரண்டையும் ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

கே.7 – எவ்வளவு நாட்களுக்கு நியூட்ரிசார்ஜ் BJ -ஐ எடுத்துக்கொள்ள வேண்டும்?

பொதுவாக, நியூட்ரிசார்ஜ் BJ எடுத்துக்கொள்ள ஆரம்பித்த ஒரு மாத காலத்திற்கும் பலன்கள் தெரிய ஆரம்பிக்கும். சிறந்த பலன்களைப் பெற்றிருக்க, இதை குறைந்தது 3 மாதங்களுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருவருடைய முழங்கால் மூட்டு நிலைமையின் தீவிரத்தைப் பொருத்து நிவாரணம் பெறும் காலம் நபருக்கு நபர் வித்தியாசப்படும். நீண்ட காலத்திற்கு நியூட்ரிசார்ஜ் BJ -ஐ தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்தாலும், இது கெடுதல் செய்யாது.

கே.8 – ஒரு நாளில் எந்த நேரத்தில் நியூட்ரிசார்ஜ் BJ -வை எடுத்துக்கொள்ள வேண்டும்.

நியூட்ரிசார்ஜ் BJ தயாரிப்பை மாலை நேரத்தில் எடுத்துக்கொள்வது நல்லது. ஒருவேளை இது சாத்தியப்படுவதில்லை என்றால், அவருடைய சொந்த சௌகரியத்தைப் பொருத்து ஒரு நேரத்தை வகுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் அதே நேரத்தில் இதை எடுத்துக்கொள்வது நல்லது.

கே.9 – நியூட்ரிசார்ஜ் BJ -ஐ எவ்வாறு எடுத்துக்கொள்ள வேண்டும்?

சாஷேயிலிருக்கும் பௌடரை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும். மாத்திரையை அதனுடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கே.10 – நியூட்ரிசார்ஜ் BJ -வை எடுத்துக்கொள்வதால் ஏதேனும் பக்கவிளைவுகள் இருக்குமா?

ஒரு சில நாட்களுக்கு மலக்கழிவு நீர்த்திருக்கும்.

கே.11 – நியூட்ரிசார்ஜ் BJ பயன்படுத்தி பலன் பெறுபவர்களை எங்கே பார்க்கலாம்?

எங்கெல்லாம் மாடிப்படிகள் உள்ளனவோ, அங்கே அவர்களைப் பார்க்கலாம். மாடிப்படி ஏறும் பொழுது வலியும் அசௌகரியமாகவும் இருப்பவர்களுக்கு நியூட்ரிசார்ஜ் BJ சிறப்பாக உதவும்.

கே.12 – குளுகோசமைன் சல்பேட்டைக் காட்டிலும் குளுகோசமைன் ஹைட்ரோகுளோரைடு எவ்வாறு மேம்பட்டது?

குளுகோசமைன் சல்பேட்டின் 74% சுத்தத்தன்மையுடன் ஒப்பிடும் போது குளுகோசமைன் ஹைட்ரோகுளோரைட்-ன் சுத்தத்தன்மை 99%. 750 மிகி குளுகோசமைன் ஹைட்ரோகுளோரைடு 1304 மிகி குளுகோசமைன் சல்பைட்டுக்குச் சமம். சந்தையில் கிடைத்துக்கொண்டிருக்கும் பல புராடெக்டுகளிலுள்ள குளுகோசமைன் மீன் எலும்புகளிலிருந்து பெறப்படுகிறது. நியூட்ரிசார்ஜ் BJ -யில் சேர்க்கப்பட்டிருக்கும் குளுகோசமைன் ஹைட்ரோகுளோரைடு முழுக்க முழுக்க சைவம்.

கே.13 – நியூட்ரிசார்ஜ் BJ -யில் சேர்க்கப்பட்டிருக்கும் மில்க் கால்சியம் இதர பிற கால்சியத்திலிருந்து எவ்வாறு மேம்பட்டது?

மற்ற கால்சியத்தை விட மில்க் கால்சியம் சிறப்பாகக் கிரக்கிக்கப்படும். மில்க் கால்சியத்தில் எலும்பு வலிமையை மேம்படுத்தும் மினரல்கள் உள்ளன. இந்த மினரல்கள் இதர பிற கால்சியத்தில் இல்லை.

கே.14. – நியூட்ரிசார்ஜ் BJ -ல் ஏன் மேக்னீசியம் சேர்க்கப்பட்டிருக்கிறது?

நம் உணவிலிருந்து கால்சியம் சத்து கிரகிக்கப்பட போதுமான அளவில் மேக்னீசியம் தேவைப்படும். எலும்புகளில் கால்சியம் சத்து சேகரமாகியிருக்கவும் மேக்னீசியம் தேவைப்படும். இதன் பல்வேறு நன்மைகளைக் கருதி, மேக்னீசியத்தை ‘மிராகிள் மினரல்’ என்று அழைக்கிறார்கள்.

கே.15 – மேக்னீசியத்தின் RDA என்ன? நியூட்ரிசார்ஜ் BJ -ல் எவ்வளவு மேக்னீசியம் உள்ளது?

எலிமென்டல் மேக்னீசியத்தின் RDA ஆண்களுக்கும் பெண்களுக்கும் 300 மிகி ஆகும். இந்த எலிமென்டல் மேக்னீசியத்தின் முழு அளவான 300 மிகி நியூட்ரிசார்ஜ் BJ -ல் சேர்க்கப்பட்டுள்ளது.

கே.16 – இன்சுலின் என்றால் என்ன, நியூட்ரிசார்ஜ் BJ -ல் இது ஏன் சேர்க்கப்பட்டுள்ளது?

இன்சுலின் இயற்கையில் கரையும் நார்ச்சத்து, கால்சியத்தைக் கிரகித்து எலும்புகள் ஆரோக்கியமாக இருக்க இது உதவுகிறது. எலும்புகளில் மினரல்கள் சேகரமாகவும் இன்சுலின் பயன்படுகிறது.

கே.17 – நியூட்ரிசார்ஜ் BJ -ல் ரோஸ்ஹிப் எக்ஸ்டிராக்ட் ஏன் சேர்க்கப்பட்டுள்ளது?

முழங்கால் மூட்டுகளின் நெகிழ்வு மற்றும் அசைவுகளுக்கு ரோஸ்ஹிப் எக்ஸ்டிராக்ட் உதவுகிறது.

Qகே.18 – முழங்கால் மூட்டுகளுக்கு வைட்டமின் கே27 எவ்வாறு பயன்படுகிறது?

எலும்புகளில் கால்சியம் சேகரமாகி வலிமையைக் கூட்ட வைட்டமின் கே27 உதவுகிறது.

கே.19 – நியூட்ரிசார்ஜ் BJ -ல் எவ்வளவு வைட்டமின் கே27 உள்ளது?

ஒவ்வொரு நியூட்ரிசார்ஜ் BJ – மாத்திரையில் 55 மைக்ரோ கிராம் வைட்டமின் கே27 சேர்க்கப்பட்டுள்ளது.

கே.20 – நியூட்ரிசார்ஜ் BJ -ல் ஏன் வைட்டமின் டி சேர்க்கப்பட்டுள்ளது?

எலும்புகளுக்கு வலுவூட்டும் கால்சியம் சத்து குடல்களில் கிரகிக்கப்பட வைட்டமின் டி உதவுகிறது. குருத்தெலும்பு சேதமடைவதை நிறுத்தவும் இது பயன்படும்.

கே.21 – நியூட்ரிசார்ஜ் BJ -க்கு என்ன சுவை?

நியூட்ரிசார்ஜ் BJ -ல் சுத்தமான ஏலக்காய் சேர்க்கப்பட்டுள்ளதால் சுகந்தத்துடன் சுவையும் கூடியிருக்கும்.

கே.22 – முழங்கால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற வலி குறைப்பான்களை எடுத்துக்கொள்வது நல்லதா?

வலி குறைப்பான்களை தற்காலிக நிவாரணம் மட்டுமே அளிக்கும். வலியிலிருந்து நிரந்தர நிவாரணம் பெற உங்கள் மூட்டுக்களைப் பலப்படுத்த வேண்டும், எலும்புகள் பலமடைய வேண்டும், மூட்டுக்களில் திரவங்கள் அதிகரித்திருக்க வேண்டும்.

கே.23 – நியூட்ரிசார்ஜ் BJ மருத்துவரீதியாக நிரூபிக்கப்பட்டிருப்பதன் முக்கியத்துவம் என்ன?

இத் தயாரிப்பு முழங்கால் மூட்டுகளுக்குப் புத்துயிர் அளிப்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டிருப்பதை அரசு அங்கீகாரமளித்திருக்கும் நிபுணர்கள் அடங்கிய நெறிமுறைக் குழு சான்றளித்திருப்பதை இது குறிக்கிறது. இத் தயாரிப்பை முழுமையான பாதுகாப்புடன் பயன்படுத்தலாம் என்பதையும் இது நிரூபிக்கிறது.

கே.24 – நியூட்ரிசார்ஜ் BJ தயாரிப்பை வாங்க ஒரு வாடிக்கையாளரிடம் பணம் இல்லை என்றால் என்ன செய்வது?

நியூட்ரிசார்ஜ் BJ -யை வாங்க ஒரு வாடிக்கையாளரிடம் போதுமான பணம் இல்லாவிட்டால், நீங்கள் கட்டாயப்படுத்தி விற்கக் கூடாது. நியூட்ரிசார்ஜ் BJ முழு கோர்ஸையும் எடுத்துக்கொள்ள இயலாத நிலைமையில் வாடிக்கையாளருக்கு முழங்கால் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் கிடைக்காது. திருப்தியடையாத ஒரு வாடிக்கையாளர் மற்ற வாடிக்கையாளரையும் அதிருப்திப் பட வைக்க முடியும்.

கே.25 – நியூட்ரிசார்ஜ் BJ தயாரிப்பை வலி நிவாரண உத்தரவாதத்துடன் விற்பனை செய்ய முடியுமா?

நிச்சயமாக முடியும். உங்கள் வீட்டு பயன்பாட்டிற்கும் நியூட்ரிசார்ஜ் BJ -ஐப் பயன்படுத்துங்கள். திருப்தி அடைந்திருக்கும் மற்ற வாடிக்கையாளர்களின் சிபாரிசை எடுத்துக் கூறுங்கள். இந்த வகையில் நீங்கள் கூட நியூட்ரிசார்ஜ் BJ குறித்து உத்திரவாதம் அளிக்க முடியும்.

நியூட்ரிசார்ஜ் கிட்ஸ் மீது கேள்விகள்

கே.1 – நியூட்ரிசார்ஜ் கிட்ஸ் எந்த ஏஜ் குரூப் குழந்தைகளுக்கு ஏற்றது?

2 முதல் 12 வயது குழந்தைகளுக்கு நியூட்ரிசார்ஜ் கிட்ஸ் ஏற்றது.

கே.2 – நியூட்ரிசார்ஜ் கிட்ஸ் வழங்கும் மிகச் சிறந்த பயன்கள் என்னென்ன?

நியூட்ரிசார்ஜ் கிட்ஸ் பெயரில் இருப்பதைப் போலவே குழந்தைகளின் ஒட்டுமொத்த உடல்நலம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு உதவும், உடல் வலிமை மற்றும் நோய்தடுப்பாற்றலை அதிகரிக்கும்.

கே. 3 – எப்பொழுது நியூட்ரிசார்ஜ் கிட்ஸ் கொடுக்க வேண்டும்?

காலை ஆகாரத்திற்குப் பிறகு நியூட்ரிசார்ஜ் கிட்ஸ் கொடுக்க வேண்டும்.

நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட்

கே.1 – நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் என்றால் என்ன?

நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் என்பது ஊட்டச்சத்து துணை உணவு ஆகும், இவை நீரிழிவு நோய்க்கு முந்திய நிலைமையில் உள்ளவர்கள் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும். உலகத்தில் இது போன்ற துணை உணவுகள் அரிதாகவே கிடைக்கின்றன.

கே.2 – நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் மருந்தா?

நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் மருந்து அல்ல. இது ஒரு துணை உணவுப் பொருள்.

கே.3 – நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட்-ஐ யார் எடுத்துக்கொள்ள வேண்டும்?

நீரிழிவுக்கு முந்திய நிலைமையிலிருப்பவர்கள் நியூட்ரிசார்ஜ கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கே.4 – ஒருவர் நீரிழிவுக்கு முந்திய நிலைமையிலிருக்கிறார் என்பதை எவ்வாறு தெரிந்து கொள்வது?

குளுகோமீட்டரைப் பயன்படுத்தி இரத்த சர்க்கரை அளவைச் சோதிக்கும் போது அவர் நீரிழிவுக்கு முந்திய நிலைமையா இல்லையா என்பது தெரிந்து விடும். ஒருவருடைய இரத்த சர்க்கரை அளவு 140 mg/dl மற்றும் 200 mg/dl அளவுகளுக்கு இடையிலிருந்தால் அவருக்கு நீரிழிவுக்கு முந்திய நிலைமை என்று தெரிந்து கொள்ளலாம்.

கே.5 ஒருவருடைய இரத்த சர்க்கரை அளவு 140 mg/dl க்கும் குறைந்திருந்தால் என்ன செய்வது?

முதலில் வாழ்த்து கூறுங்கள், அவர் ஆரோக்கியமாக இருக்கிறார் என்று. பிறகு, தினமும் நியூட்ரிசார்ஜ் PVMF எடுத்துக்கொள்ளச் சிபாரிசு செய்யுங்கள்.

கே.6 – நிரிழிவுக்கு முந்திய நிலைமையில் ஏதாவது அறிகுறிகள் தெரிய வருமா?

நீரிழிவுக்கு முந்திய நிலையில் அறிகுறிகள் எதுவும் தெரிய வராது.

கே.7 – நீரிழிவுக்கு முந்திய நிலைமையில் தீங்கு ஏதாவது உண்டா?

சரியாக கவனிப்பு எடுத்துக்கொள்ளாத போது நீரிழிவுக்கு முந்திய நிலையிலிருப்பவர்கள் நீரிழிவு நோயர்களாக மாற முடியும். இதனால் கண்கள், சிறுநீரகங்கள், இதயம் மற்றும் மூளை பாதிப்படையலாம்.

கே.8 – நீரிழிவுக்கு முந்திய நிலையிலிருப்பவர்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை எந்த கால இடைவெளியில் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்?

நீரிழிவுக்கு முந்திய நிலையிலிருப்பவர்கள் மாதந்தோறும் இரத்த சர்க்கரை அளவுகளைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.

கே.9 – நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட்டில் புரதம் ஏன் சேர்க்கப்பட்டுள்ளது?

ஏனென்றால், இரத்த சர்க்கரை அளவு ஏகமாக எகிர்வதைத் தடுக்கவும், தசை இழப்பு அபாயங்களிலிருந்து பாதுகாக்கவும் புரதம் உதவுகிறது.

இவ்வகையில் உத்தம அளவில் புரத ஊட்டச்சத்து கிடைப்பதால் பலவீன உணர்வு தவிர்க்கப்படும்.

கே.10 – நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் -ல் மூலிகைகளும் சேர்க்கப்பட்டிருக்கிறதே, ஏன்?

ஏனென்றால், குடலில் இரத்த சர்க்கரை கிரகிக்கப்படுவதை இது தடுக்கிறது. இரத்த சர்க்கரை அளவு அதிகமாவதன் கேடுகளிலிருந்தும் பாதுகாக்கிறது.

கே.11 – நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட்டிலுள்ள மூலிகைகளின் குணங்கள் எப்படிப்பட்டவை?

அனைத்து மூலிகைகளும் உயர்தரமானவை.

கே.12 – நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட்டில் இலவங்கப்பட்டை சேர்க்கப்பட்டிருப்பதின் காரணம் என்ன?

இரத்த சர்க்கரை மற்றும் கொலஸ்டிரால் அளவுகளைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை உதவும்.

கே.13 – கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை உதவுமா?

ஆமாம், கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்த இலவங்கப்பட்டை உதவும்.

கே.14 – நியூட்ரிசார்ஜ் கிளைசெம் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் விலை அதிகமானதா?

பணத்திற்கான மதிப்பு என்ன கிடைக்கிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். நீரிழிவுக்கு முந்திய நிலையிலுள்ளவர்கள் தங்கள் இரத்த சர்க்கரை அளவுகளைக் கட்டுப்படுத்தாவிட்டால், விரைவில் நீரிழிவு நோயர்களாகும் அபாயம் உள்ளது. இரத்தக் கொதிப்பு, இதய நோய் பிரச்சனைகள் போன்ற பல அபாயங்கள் நீரிழிவு நோயரைச் சூழ்ந்திருக்கும். இந்த நோய்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளும் இலட்சக்கணக்கான ரூபாயுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் விலை ஒன்றுமேயில்லை.
நியூட்ரிசார்ஜ் புரோடயட் அல்லது நியூட்ரிசார்ஜ் ஸ்ட்ராபெர்ரி புரோடயட் விலை நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் விலையில் அடக்கம். நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட்டுடன் இனிப்பூட்டி இலவசமாகக் கிடைக்கும். இதில் உச்சதர மூலிகைகளும் ஊட்டச்சத்துக்களும் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இவ்வளவு குறைந்த விலையில் இவைகளைப் பெறுவது என்பது நடவாத காரியம்.

கே.15 – சந்தையில் கிடைக்கும் மற்ற தயாரிப்புகளை விட நியூட்ரிசார்ஜ் கிளைசெம் எவ்வாறு உயர்ந்தது?

துணை உணவுப் பொருளான நியூட்ரிசார்ஜ் கிளைசெம் நீரிழிவுக்கு முந்திய நிலையிலுள்ளவர்களுக்காக பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 12 இயற்கை மூலிகைகள், புரதம், உணவு நார்ச்சத்து, இலவங்கப்பட்டை இன்னும் பற்பல ஊட்டச்சத்துகள் அனைத்தும் இரத்த சர்க்கரை அளவுகளைப் பராமரிக்கச் சேர்த்திருக்கிறோம். சந்தையில் கிடைக்கும் வேறு எந்த புராடெக்டிலும் இவ்வளவு உயர்தர மூலிகைகளும் ஊட்டச்சத்துக்களும் இல்லை.

கே.16 – நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட்-ஐ எப்பொழுது எடுத்துக்கொள்ள வேண்டும்?

காலையில் வெறும் வயிற்றில் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட்டை மென்று சாப்பிட வேண்டும். நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட்டை ஒரு டம்ளர் கொழுப்பு குறைந்த பாலில் கரைத்து அதனுடன் ஒரு சாஷே இனிப்பூட்டியை சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதை நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட்டுடன் எடுத்துக்கொள்ளுங்கள்.

கே.17 – நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட்டை எவ்வளவு காலத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்?

உங்கள் இரத்த சர்க்கரை அளவு இயல்பு நிலைமைக்குத் திரும்பும் வரை அதாவது 140 mg/dl க்கும் கீழே வரும் வரை நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட்டை எடுத்துக்கொள்ள வேண்டும். இரத்த சர்க்கரை அளவு இயல்பு நிலைமைக்குத் திரும்பிய பிறகும் நீங்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டிருந்தால் இரத்த சர்க்கரை அளவு மீண்டும் எகிராமல் இருக்கும்.

கே.18 – நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் எடுத்துக்கொள்ளும் போது எவ்வளவு காலத்திற்குள் இரத்த சர்க்கரை அளவுகள் இயல்பு நிலைக்குத் திரும்பும்?

பொதுவாக, ஒரு மாதத்தில் 20 mg/dl அளவில் இரத்த சர்க்கரை அளவு குறையும். வழக்கம் தவறாமல் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் எடுத்துக்கொள்ளுதல், உணவுப் பழக்க வழக்கம் மற்றும் உடலுழைப்பு நடவடிக்கைகள் அடிப்படையில் இரத்த சர்க்கரை அளவு குறைந்து வரும்.

கே.19 – நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் டயபெடிக் உள்ளவர்களுக்குக் கொடுக்கலாமா?

ஆமாம், நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் நீரிழிவு நோயர்களுக்கும் கொடுக்கலாம். இதனால் அவர்கள் உடல் திண்மை மேம்படும், உடலளவிலும் மனத்தளவிலும் ஆரோக்கியமாக உணர்வார்கள். இருந்தாலும், அவர்கள் தொடர்ந்து அவர்களுடைய மருந்துகளை எடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.

கே.20 – நீரிழிவுக்கு முந்திய நிலை நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் பயன்பாட்டில் மட்டுமே குணமடையும் என்றால், ஏன் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் எடுத்துக்கொள்ள வேண்டும்?

நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட்டில் வெவ்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன, இரத்த சர்க்கரை அளவுகளை இவை வித்தியாசமான முறையில் கட்டுப்படுத்தும். அதனால் தான், இரண்டையும் எடுத்துக் கொள்வதால் உத்தம விளைவுகள் கிடைக்கும்.

கே.21 – நியூட்ரிசார்ஜ் மேன் டேப்லெட் அல்லது நியூட்ரிசார்ஜ் உமன் டேப்லெட் எடுத்துக் கொண்டிருந்தால் அதனுடன் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் எடுத்துக்கொள்ளலாமா?

ஆமாம், எடுத்துக்கொள்ளலாம்.

கே.22 – நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட்டுடன் நியூட்ரிசார்ஜ் புரோடயட் அல்லது நியூட்ரிசார்ஜ் ஸ்ட்ராபெர்ரி புரோடயட்டும் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டுமா?

நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட்டுடன் நியூட்ரிசார்ஜ் புரோடயட் அல்லது நியூட்ரிசார்ஜ் ஸ்ட்ராபெர்ரி புரோடயட் எடுத்துக்கொள்வது கட்டாயமில்லை.

கே.23 – நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் எடுத்துக்கொள்ளும் போது வேறு ஏதாவது குறித்து கவனமாக இருக்க வேண்டுமா?

நியூட்ரிசார்ஜ் கிளைசெம் டேப்லெட் மற்றும் நியூட்ரிசார்ஜ் கிளைசெம் புரோடயட் எடுத்துக்கொள்வதுடன் சர்க்கரை இல்லாத சமச்சீர் உணவு மற்றும் உடற்பயிற்சி (6000 காலடிகள் மற்றும் 250 படிகள் ஏறுவது) அவசியம் செய்ய வேண்டும்.